தூத்துக்குடி மாநகரில் நாளை (செவ்வாய், 17.02.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும். வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு சுத்திகரிப்பு நிலையப் பகுதிகளில் மின்சாரப் பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்த பாதிப்பு ஏற்படும் என மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா தெரிவித்துள்ளார். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.