தூத்துக்குடியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் பேசிய அவர், மகளிர் உரிமைகள் தொடர்ந்து போராடிப் பெறப்பட்டவை என்றும், பெண்களை வீட்டில் கட்டுப்படுத்தாமல் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகத்தில் பெண்களுக்கு சொத்தில் சம பங்கு வழங்கப்பட்டதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முக்கிய சாதனையாகக் குறிப்பிட்டார். கல்வியே பெண்களின் நிலையான சொத்து என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் என்றும், உதவிக்காக 181 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.