உலக சுற்றுச்சூழல் தின விழாவில் தூத்துக்குடி மேயர்

59பார்த்தது
உலக சுற்றுச்சூழல் தின விழாவில் தூத்துக்குடி மேயர்
பூமியையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி ரஹமத் நகர் பூங்காவில் மேயர் ஜெகன் பெரியசாமி மரங்கள் நட்டார். 

மேலும் அவர், பசுமையான புவியை உருவாக்குவோம். மாநகர மக்கள் மரம் நடுதல், சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் மாசு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தருமாறும் பொதுமக்களை கேட்டுக் கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, சுப்புலட்சுமி, மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், மற்றும் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you