இளம்பெண் தற்கொலை: கடிதத்தை கைபற்றி போலீசார் விசாரணை

0பார்த்தது
இளம்பெண் தற்கொலை: கடிதத்தை கைபற்றி போலீசார் விசாரணை
தூத்துக்குடி சகாயபுரத்தைச் சேர்ந்த 22 வயதான ஜெமிலா, திருமணமாகி இரண்டு ஆண்டுகளிலேயே கணவர் பெனோ மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்த மன உளைச்சலைத் தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். குழந்தை இல்லாததை காரணம் காட்டி அவமதிப்பு, கணவரின் ஆன்லைன் ரம்மி அடிமை, நகை அடகு வைத்து கடன் தீர்த்தல், வீட்டில் இருந்து வெளியேற சொல்லிய தகராறு உள்ளிட்ட காரணங்களால் ஜெமிலா மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. தென்பாகம் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோட்டாட்சியர் தலைமையிலும் விசாரணை நடைபெறுகிறது. தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமனார், சகோதரி மற்றும் மைத்துனர் மீது நடவடிக்கை எடுக்க ஜெமிலாவின் தாய் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி