நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இசக்கி பாண்டியன் என்ற இளைஞரை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். காவல் ஆய்வாளர் சாவித்திரி தலைமையில் நடந்த சோதனையில், அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.