தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே 2 மோட்டார் சைக்கிள்களை திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி முத்தையாபுரம் ஜே.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி, கட்டிட தொழிலாளி. இவர், சம்பவத்தன்று இரவில் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயிருந்தது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதேபோன்று, அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மகன் மாடசாமி (33), லாரி டிரைவர். இவருடைய வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அவருடைய மோட்டார் சைக்கிளும் திருடுப்போனது. இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், 2 மோட்டார் சைக்கிள்களையும் திருடிச் சென்றது முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், 2 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டனர். பின்னர் அந்த இளைஞர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.