வாலிபர் சரமாரி வெட்டி கொலை: போலீஸ் விசாரணை!

808பார்த்தது
வாலிபர் சரமாரி வெட்டி கொலை: போலீஸ் விசாரணை!
தூத்துக்குடியில், தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்பட 4 வழக்குகளில் தொடர்புடைய அஜய் என்ற ஜப்பான் (21) இன்று இரவு 8 மணி அளவில் 3 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும், இன்று காலை முதல் காணாமல் போன அவரது 13 வயது தங்கைக்கும் தொடர்பு உள்ளதா என போலீஸ் சந்தேகிக்கிறது. தங்கையை காணவில்லை என அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், அண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளார். தங்கையின் விவகாரம் காரணமாக மர்ம கும்பல் அவரை ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்தார்களா என்ற கோணத்தில் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று பேர் கொண்ட கும்பல் கொலை செய்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.