தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே அழகாபுரியில் சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம் நோக்கி சென்ற லோடு ஆட்டோ, வலதுபுற முன் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து திருவேங்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.