
செல்போன் தகராறு விபரீதம் – மாணவர் மீது கொடூர தாக்குதல்!
தூத்துக்குடியில், கல்லூரி மாணவர் அஜய் தேவகுமாரனை தனியார் ஆம்னி பேருந்தில் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனை கேட்டு ஏற்பட்ட தகராறில், அந்த நபர் மாணவரின் கழுத்தை நெறித்து, பின்னர் கத்தியால் கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் காயப்படுத்தி தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


































