தூத்துக்குடி: கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது.. 2 பைக்குகள் பறிமுதல்

319பார்த்தது
தூத்துக்குடி: கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது.. 2 பைக்குகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக அப்துல் சுக்குர் (25) மற்றும் முகமது புகாரி (31) ஆகிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பேயன்விளை பகுதியில் பள்ளி பின்புறம் கஞ்சா விற்ற அப்துல் சுக்குரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சாகுபுறம் பஸ்நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற முகமது புகாரியிடமிருந்தும் 150 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி