தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தலா 680 மெகாவாட் திறனில் செயல்பட உள்ள அனல்மின் நிலையப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எரிபொருள் தேவைக்காக கடற்கரை அருகே அமைக்கப்பட்ட பிரத்யேக சிறு துறைமுகமும் தயாராகி வருகிறது. முதற்கட்டமாக இந்தோனேசியாவிலிருந்து 20,000 டன் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்து, அங்கிருந்து கடல் வழியாக மின் நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை மின்வாரியத் துறை தலைமை அதிகாரி ராதாகிருஷ்ணன் இந்த வார இறுதியில் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.