விளாத்திகுளம்: கடம்பூர் ராஜு முன்னிலையில் 500 பேர் அதிமுகவில் இணைப்பு

129பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது பேசிய கடம்பூர் செ. ராஜூ, “விஜய் தொடங்கியது வெற்றி கழகம் அல்ல, வெற்றுக் கழகம்” என்றும், 2026 தேர்தலில் வெற்றி அதிமுகவுக்கே என்றும் கூறினார். மேலும், மெர்சல் பட பிரச்சனை அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரே இரவில் தீர்க்கப்பட்டது, ஆனால் இன்று விஜய் அதிமுக பெயரை சொல்லவே தயங்குகிறார் என விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி