காங்கிரஸ் கட்சியினர் 75 பேர் திமுகவில் ஐக்கியம்

1பார்த்தது
காங்கிரஸ் கட்சியினர் 75 பேர் திமுகவில் ஐக்கியம்
தூத்துக்குடியில், காங்கிரஸ் கட்சியில் இருந்த 75 பேர், அக்கட்சியின் கூட்டணி முடிவில் அதிருப்தி அடைந்து விலகியுள்ளனர். அவர்கள் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். எட்டையாபுரம் சாலையிலுள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக இணைந்தவர்களுக்கு திமுகவில் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், கட்சிப் பொறுப்புடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திமுக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி