தூத்துக்குடி தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் குமாரர் தெரு பச்சை சாத்து அன்பர்கள் குழு சார்பில் 108 பௌர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜைகளை கோவில் பிரதான பட்டர்கள் சிவா மற்றும் குரு செய்தனர். பின்னர் அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.