இலங்கைக்கு கடத்த முயன்ற பறிமுதல்

1பார்த்தது
இலங்கைக்கு கடத்த முயன்ற பறிமுதல்
தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, லோடு வேனில் இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 2,000 கிலோ பீடி இலைகள் 59 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 69 லட்சம் ஆகும். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி