சிலுவைபட்டி கடற்கரை பகுதியில், ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சுமார் 1000 கிலோ பீடி இலைகள் (39 பண்டல்கள்) பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த நிலையில், க்யூ பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பீடி இலைகளை கடற்கரைக்கு கொண்டு வந்த சரக்கு வாகனம் கைப்பற்றப்பட்டது. இந்த கடத்தலில் ஈடுபட்டதாக மாரிஸ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.