நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய், உயிருக்கு ஆபத்து! ”

513பார்த்தது
நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய், உயிருக்கு ஆபத்து! ”
விளாத்திகுளம் நகரில் சாலை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மதுரை சாலை, எட்டையாபுரம் சாலை, வேம்பார் சாலை போன்ற முக்கிய பகுதிகளில் கடைகள் சாலையை ஆக்கிரமிப்பதால், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மதுரை சாலையில் நடுரோட்டில் சிப்ஸ் பொரிப்பது விபத்து அபாயத்தை அதிகரிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நெடுஞ்சாலைத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி