தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே K. துரைச்சாமிபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ காளியம்மன் கோவில் ஆடி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில், பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான்சிட்டு என மூன்று பிரிவுகளில் 66 ஜோடி மாடுகள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், விழா கமிட்டினருக்கும் இடையே, மாடுகளின் பற்கள் எண்ணிக்கையில் விதிமீறல் நடந்ததாகக் கூறி சலசலப்பு ஏற்பட்டது.