தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டி கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு, சிங்கிலிபட்டி முருகன்-கோபிகா திருமண விழாவை ஒட்டி மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் சின்னமாடு, பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சுமார் 30 ஜோடி மாடுகள் பங்கேற்றன. சிங்கிலிபட்டியில் இருந்து விளாத்திகுளம் வரை நடைபெற்ற இந்தப் போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.