தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கிட்டங்கி தெருவைச் சேர்ந்த வியாபாரி காளியப்பன் (68), உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு, வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்களால் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும், பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.