விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புகாரை அலட்சியப்படுத்தியதாக தலைமை ஆசிரியை அன்னை சீபா ஃபிளவர் லைட் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில மாணவிகள் இருவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.