உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் திட்டத்தின் கீழ் எட்டயபுரம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க. இளம்பரவதி கள ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் எட்டயபுரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பரவதி, கள ஆய்வு மேற்கொண்டார்.