மத உணர்வு உரிமைகளை பாதுகாக்க சட்டம் வேண்டும்: கோரிக்கை!

2பார்த்தது
மத உணர்வு உரிமைகளை பாதுகாக்க சட்டம் வேண்டும்: கோரிக்கை!
மத உணர்வு மற்றும் அடையாள உரிமைகளைப் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்த வேண்டும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும், புறம்போக்கு என பதிவு செய்யப்பட்ட வக்பு சொத்துக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பினர் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களிடம் மனு அளித்தனர். சம்சுதீன் தலைமையில் என். ஏ. கிதர் பிஸ்மி மனுவை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி