தூத்துக்குடி: லாரி - கார் மோதி விபத்து நடத்துனர் பலி

1239பார்த்தது
தூத்துக்குடி: லாரி - கார் மோதி விபத்து நடத்துனர் பலி
எட்டயபுரம் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் அரசு போக்குவரத்து கழக தற்காலிக நடத்துனர் பிரதீப் குமார் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விளாத்திகுளம் அருகே காற்றாலை இறக்கைகள் ஏற்றிச் சென்ற லாரியுடன் கார் மோதி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானதில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி