தூத்துக்குடி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டையபுரம் அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் காயமடைந்தார். விசாரணையில் கார் ஓட்டுநர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல் வழக்கில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மது அருந்தி வாகனம் ஓட்டுவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.