பக்ரீத் முன் எட்டயபுரம் ஆட்டுச் சந்தை களை கட்டியது

398பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 7,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்து, சுமார் ரூ. 4 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. 10 முதல் 35 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ. 12,000 முதல் ரூ. 40,000 வரை விற்கப்பட்டன. வியாபாரிகள் கூறுகையில், கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், குறிப்பாக 10 கிலோ எடையுள்ள ஆட்டுக்குட்டிகள் கூட ரூ. 12,000 வரை விலை போனதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி