தூத்துக்குடி அருகே வீட்டு வாசலில் பாய் விரித்து படுத்திருந்தபோது, பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகில் உள்ள தெற்கு கோடாங்கிபட்டி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் சந்திரவேல் (60), விவசாயி. இவர் நேற்று இரவு இரவு 10 மணியளவில் தனது வீட்டு வாசலில் பாய் விரித்து படுத்து தூங்கினாராம். அப்போது ஒரு பாம்பு அவரை கடித்துள்ளது. இதையடுத்து அவரது மகன் ஜெயக்குமார் கார் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மேகலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.