தருவைகுளம் கடற்கரையில் உப்பாற்று ஓடை கடலில் கலக்கும் பகுதியில் அதிக அளவில் மீன்கள் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு நிலவியது. அரை கிலோ எடையுள்ள பல மீன்கள் இறந்த நிலையில் காணப்பட்டதால், தண்ணீரில் நச்சுக் கழிவுகள் கலந்திருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.