சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மீனவர் கைது

0பார்த்தது
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மீனவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த திலேத்குமார் (52) என்பவர், விளாத்திகுளம் அருகே வேம்பாரில் தனது நண்பருடன் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 27-03-2026 அன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, அங்கு தனியாக இருந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திலேத்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி