தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்த மீனவர் ஜான்சன் (52) தவறி கடலில் விழுந்து உயிரிழந்தார். அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. மரைன் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.