தூத்துக்குடி: வீடு புகுந்து தாக்கிய கும்பல் – காதல் திருமணம் காரணமா?

1236பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே, காதல் திருமணத்திற்கு உதவியதாக கூறி இளைஞர் கௌதம் மற்றும் அவரது தந்தை பரமசிவன் ஆகியோரை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் நடந்த இந்த தாக்குதலில் கௌதம் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தந்தை பரமசிவனும் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்டவரின் தாய் ரேவதி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி