தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.02.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத் தலைமையில் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஆ. இரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி. பிரேமலதா ஆகியோர் உடனிருந்தனர்.