தூத்துக்குடி அருகே முப்பிலிவெட்டி பகுதியில் அரசு பேருந்து மோதி அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் சுப்புராஜ் (26) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாதயாத்திரையாளர்களை தவிர்க்க வாகனத்தை விலக்கிய போது எதிரே வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.