விளாத்திகுளம் அருகே பாலமுருகன்-சாந்தி தம்பதியினர் தவறவிட்ட 16 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போனை, எட்டையாபுரம் போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து மீட்டனர். மண்ணில் புதைக்கப்பட்டிருந்த ஹேண்ட்பேக்கை மீட்ட போலீசார், நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.