விளாத்திகுளத்தில் மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபவம்

66பார்த்தது
விளாத்திகுளத்தில் மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபவம்
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதுரைக்கு அடுத்தபடியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகள் எழுந்தருளி அருள் பாலிக்கும் விசேஷமான தலமாக விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் விளங்கி வருகிறது. அவ்வாறு விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், மதுரை மீனாட்சி திருக்கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களும் வைபவங்களும் இக்கோவிலில் நடைபெறும் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. 

அதன்படி விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா 12 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழாவானது கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 13-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இத்திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் மற்றும் சுந்தரேஸ்வரர் பலவகையான வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி