தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தை கிராமத்தில் ஒரு தனியார் நிறுவனம், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 260 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாகப் பதிவு செய்து ஆக்கிரமித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பை ரத்து செய்து நிலங்களை மீட்டுத் தரக் கோரி
அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.