கலைஞர் அரங்கில் நடைபெற்ற வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பி. கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். பிப்ரவரி 22-ஆம் தேதி தூத்துக்குடியிலும், 24-ஆம் தேதி கோவில்பட்டியிலும் நடைபெறும் “தமிழ்நாடு தலைகுனியாது” தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்தவும், மார்ச் 1-ஆம் தேதி மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாடவும் தீர்மானிக்கப்பட்டது.