மாட்டுவண்டி மீது மோட்டார் பைக் மோதல்: வாலிபர் பலி

0பார்த்தது
மாட்டுவண்டி மீது மோட்டார் பைக் மோதல்: வாலிபர் பலி
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (24) என்பவர், மேலஅரசரடியில் உள்ள தனியார் ஆலையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலையில் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, விளாத்திகுளம்-குளத்தூர் வடக்கு காலனி மின் வாரியப் பகுதியில் மணல் ஏற்றிய மாட்டு வண்டி மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி