நம்மாழ்வார் நினைவு தினம் மாட்டு வண்டிப் பந்தயம் விதைதிருவிழா

426பார்த்தது
நம்மாழ்வார் நினைவு தினம் மாட்டு வண்டிப் பந்தயம் விதைதிருவிழா
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு, விளாத்திகுளம் பகுதியில் தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் மாட்டு வண்டிப் பந்தயம் மற்றும் பாரம்பரிய விதை திருவிழா நடைபெற்றது. பூஞ்சிட்டு, தேன்சிட்டு என இரு பிரிவுகளில் நடந்த போட்டியில் 82 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. விதை கண்காட்சியில் பாரம்பரிய நெல், சிறுதானியங்கள், பனைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், மாடுகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி