தூத்துக்குடி உப்பு தொழிலாளர்களுக்கு புதிய கூலி ஒப்பந்தம்

609பார்த்தது
தூத்துக்குடி உப்பு தொழிலாளர்களுக்கு புதிய கூலி ஒப்பந்தம்
தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து 2026–2028 காலத்திற்கான புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, உப்பு வாருதல் பணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 710 மற்றும் இதர பணிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 700 கூலியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 30.04.2026 முதல் 29.04.2028 வரை அமலில் இருக்கும். குறைந்தபட்ச கூலி, அகவிலைப்படி உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த ஒப்பந்தம் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்களுக்கு நன்மை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி