தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், பதிவு செய்யப்படாத விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது நாட்டுப் படகு மீனவர்களின் வலையை சேதப்படுத்தியதாக பிரச்சனை எழுந்தது. நேற்று (10-11-25) இரவு, விசைப்படகு துறைமுகத்தில் மீன்களை இறக்கும்போது, இனிக்கோ நகர் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகு தொழிலாளி கனிஷ்டனை (35) தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யக் கோரி, விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத் தலைவர்கள் தலைமையில் மீனவர்கள் இன்று (11.11.25) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.