தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கபடி அணிகளுக்கு திருச்செந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு மாநில அளவிலான கபடி அணிக்கு கபடி வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கபடி அணியும் பங்கேற்கிறது. போட்டியில் பங்கேற்க உள்ள கபடி வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, விளாத்திகுளம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன் அவர்களுக்கு கபடி விளையாட்டுச் சீருடைகளை அன்பளிப்பாக வழங்கி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். மாவட்ட அமெச்சூர் கபடி கழக விளாத்திகுளம் பொறுப்பாளர் தங்கதுரை, அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து உட்பட பலர் இநிகழ்வில் கலந்துகொண்டனர்.