கார்த்திகை தீப திருநாள் ஓலைகள் விற்பனை மும்மரம்!

0பார்த்தது
தீப திருநாளாம் கார்த்திகை திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் பனை ஓலைகளில் கொழுக்கட்டை செய்து வழிபாடு நடத்துவதற்காக ஏராளமான ஆண் பெண் தொழிலாளர்கள் பனை குருத்து ஓலைகளை விற்பனை செய்து வருகின்றனர். வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக பனை மரங்களில் இருந்து பனை ஓலை குருத்து வெட்ட முடியாததாலும், குறைவான அளவு விற்பனைக்கு வந்ததாலும் ஒரு கட்டு பனை ஓலை குருத்து 50 ரூபாயிலிருந்து 150-200 ரூபாய் வரை விற்பனையானது. மேலும், வீடுகளில் விளக்கு ஏற்றுவதற்காக பல்வேறு வகையான அகல் விளக்குகளும், மெழுகுவர்த்திகளும் தீவிரமாக விற்பனையாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி