தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேலிடுபட்டி காலனி தெருவைச் சேர்ந்த வலியன் மனைவி மாரியம்மாள் (48), விளாத்திகுளம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று டிராக்டரில் குப்பைகளை ஏற்றிக்கொண்டு வேம்பார் சாலையில் சென்றபோது, டிராக்டரின் பின்புறம் லாரி மோதியதில் மாரியம்மாள் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். டிரைவர் ஜெயராமன் (44) மற்றும் தூய்மைப் பணியாளர் கார்த்திக் (32) படுகாயமடைந்தனர். இருவரும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநர் பாவாஸ் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.