மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் இருவர் பணியிடை நீக்கம்

2பார்த்தது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் இருவர் பணியிடை நீக்கம்
விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் மீது 12ஆம் வகுப்பு மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு கூறி புகார் அளித்தனர். இது தொடர்பாக போக்சோ உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆசிரியர் தலைமறைவாக உள்ளார். மாணவிகளின் புகாரை அலட்சியப்படுத்திய தலைமை ஆசிரியர் அன்னை சீபா ஃபிளவர் லைட் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து, இருவரையும் முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் கல்வித்துறை மற்றும் உள்ளூர் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி