புதுப்பட்டியில் தனியார் சோலார் மின் நிறுவனம் விவசாய நிலங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் ஓடைகளை ஆக்கிரமித்து முள்வேலி அமைத்ததாகக் கூறி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விவசாயிகளுடன் இணைந்து பா.ஜ.க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விவசாயிகள் நிலங்களுக்கு செல்ல பாதை ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. போலீஸ் பாதுகாப்பு காரணமாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.