வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் இயங்கும் திருநெல்வேலி விற்பனை குழுவிற்கு உட்பட்ட விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.