மாணவி பாலியல் கொலை வழக்கு: குற்றவாளி 2-வது நாளாக ஆஜர்

2பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனிஸ்வரன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளி தர்ம முனிஸ்வரனை போலீசார் இன்று இரண்டாவது நாளாக தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். நேற்று 7 சாட்சிகளிடம் விசாரணை நடந்த நிலையில், இன்று 8 முதல் 18 வரை சாட்சிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி