டவுன் டி. எஸ். பியாக சுனில் நியமனம்: டிஜிபி உத்தரவு

2பார்த்தது
டவுன் டி. எஸ். பியாக சுனில் நியமனம்: டிஜிபி உத்தரவு
தமிழகம் முழுவதும் 88 போலீஸ் டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பியாக இருந்த மதன் திருநெல்வேலிக்கு பதவி உயர்வு பெற்று சென்றுள்ளார். அவருக்கு பதிலாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் டிஎஸ்பி சுனில் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் மதுரை சிட்டி டிஎஸ்பியாகவும், மணியாச்சி டிஎஸ்பி அருள் மதுரைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக நெல்லை சிட்டியில் பணிபுரிந்த அஞ்சுகுமார் மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.