கழிவு ஆயிலால் தார்ச்சாலையா? தட்டிக்கேட்ட வர்களுக்கு மிரட்டல்!

5பார்த்தது
கழிவு ஆயிலால் தார்ச்சாலையா? தட்டிக்கேட்ட வர்களுக்கு மிரட்டல்!
விளாத்திகுளம் அருகே ஸ்ரீரங்கபுரம் – நூத்தலக்கரை சின்னையாபுரம் வரை முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 146. 76 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 3. 2 கி. மீ தார்ச் சாலை மற்றும் பாலம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சாலை ஒரு அங்குலத்திற்கும் குறைவான கனத்தில் இருப்பதாகவும், கைகளால் தொட்டாலே பெயர்ந்து வருவதாகவும், பாலப் பணிகளிலும் தரமற்ற கலவை பயன்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய கிராம மக்களை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் போலீசில் ஒப்படைப்போம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.